ஆவின் நிறுவனம் நுகர்வோர் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கங்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, புதிய மாதாந்திர பால் அட்டைகள் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய பால் அட்டை வழங்குவதற்கு நுகர்வோர் ஆவின் வழங்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இருப்பிட சான்றிதழ், அடையாள சான்றிதழ் நகலை இணைத்து கொடுக்க வேண்டும்.
இதனடிப்படையில் புதிய மாதாந்திர பால் அட்டைகள் உடனடியாக வழங்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கங்கள் தங்கள் குடியிருப்பில் வசிப்போர்களுக்கு ஆவின் மாதாந்திர அட்டை தேவைப்பட்டால் ஆவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும் நந்தனம் விற்பனை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நுகர்வோர் சேவை மற்றும் உதவி பிரிவையும், 1800–425–3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் ஆவின் மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment