Friday, December 12, 2014

ரேஷன் பொருள் விநியோகத்தில் உள்ள குறைகளை தீர்க்க முகாம் சென்னையில் நாளை நடக்கிறது



ரேஷன் அட்டை மற்றும் பொருள் விநியோகத்தில் உள்ள குறைகளை தீர்க்க சென்னையில் நாளை முகாம் நடத்தப்படுகிறது.

குறைதீர்வு முகாம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் 13.12.14 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் இந்த முகாமில் தெரிவிக்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நடக்கும் இடங்கள்

சிதம்பரனார் மியாசி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. 113, அங்கப்பன் தெரு, மண்ணடி; ராயபுரம் ராஜகோபால் மேல்நிலைப்பள்ளி, ஜி.எம். பேட்டை; பெரம்பூர் சென்னை நடுநிலைப்பள்ளி, கோபாலபுரம், திரு.வி.க. நகர்;

அண்ணாநகர் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு நெடுஞ்சாலை; அம்பத்தூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சாவடி தெரு, கொரட்டூர்; வில்லிவாக்கம் நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சாந்தி காலணி, அண்ணா நகர் மேற்கு;

பரங்கிமலை

திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி; ஆவடி அண்ணா சமுதாயக்கூடம், மேல்பாக்கம், வெள்ளச்சேரி, கதவூர்; தியாகராயநகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம், (புதூர்) 3–வது அவன்யூ, அசோக்நகர்; மைலாப்பூர் புனித ரபேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 18/2, கச்சேரிசாலை;

பரங்கிமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர திருமண மண்டபம், பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலை, ஆதம்பாக்கம்; தாம்பரம் லிடியா மெட்ரிகுலேசன் பள்ளி, கஸ்பாபுரம், அகரம்;

ஆயிரம் விளக்கு

சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 112 கோடம்பாக்கம் நெடுஞ்சாலை; ஆயிரம் விளக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நந்தனம் விரிவு, 5–வது மெயின் ரோடு, நந்தனம்; சேப்பாக்கம் சென்னை மாநகராட்சி சமுதாய கல்லூரி, அருணாச்சலம் தெரு, சேப்பாக்கம்;

சோழங்கநல்லூர் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம், (195–வது வார்டு) கண்ணகி நகர் ஆகிய இடங்களில் முகாம்கள் நடக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024