Wednesday, July 1, 2015

விதிமுறைகளும், அபராதங்களும்!

மது அருந்திவிட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு ரூ.500 அபராதம், பயணத்தில் இருந்து பாதியில் இறக்கி விடப்படுவர்.
மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான பொருள்களை எடுத்துச் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
ஆபத்தான பொருள்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
மெட்ரோ ரயில் சொத்துகளில் போஸ்டர், எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும்.
மெட்ரோ ரயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் 1 மாதம் சிறை தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்படும்.
பயணச் சீட்டு இல்லாமல் அத்துமீறி ரயில் நிலையத்துக்குள் நுழைபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 250 அபராதம் விதிக்கப்படும்.
மெட்ரோ ரயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
ஓடும் ரயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு பணியின்போது தொல்லை கொடுத்தால் 1 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
பாஸ் அல்லது பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் ரூ. 50-ம், பயணத்துக்கான பயணக் கட்டணமும் சேர்த்து அபராதம் விதிக்கப்படும்.
ரயிலில் உள்ள தொலைத் தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாக பயன்படுத்தினாலோ 1 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
போலி பயணச் சீட்டை உருவாக்கினால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
உணவுப் பொருள்களை அத்துமீறி விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ரயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளை தாக்கிய குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை (சட்ட விதிகளுக்கு உள்பட்டு) விதிக்கப்படும்.
மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
பொய்யான புகார்கள், பொய்யான நிவாரணம் கோருபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...