Friday, March 17, 2017

மார்ச் 20 வரை மழைக்கு வாய்ப்பு

குன்னுார், பாபநாசத்தில், கோடை மழை அதிகளவில் பெய்துள்ளது.
கோடை வெயில் துவங்கி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், மார்ச், 2 முதல், வட மாவட்டங்களை தவிர, மற்ற இடங்களில், பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் பெய்த மழை அளவை, நேற்று காலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இதன்படி, நீலகிரி மாவட்டம், குன்னுாரில் அதிகபட்சமாக, ஒன்பது செ.மீ.,; திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில், ஏழு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துாரில், ஐந்து; அருப்புக்கோட்டை, புதுக்கோட்டை அரிமளம், மூன்று; திருவாடானை, செங்கோட்டை, ஆய்க்குடி, திருபுவனம், நத்தம், மணிமுத்தாறு, பெரியகுளம், திருச்சி விமான நிலையம் ஆகிய இடங்களில், இரண்டு செ.மீ., மழை பதிவானது.

இதுதவிர பல மாவட்டங்களில், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இந்த கோடை மழை, மார்ச், 20 வரை, தமிழக உள்மாவட்டங்களில் நீடிக்கும்.
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலையே நிலவும் என, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024