Friday, March 17, 2017

மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு

'தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதால், 2,100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் குறைந்துள்ளது,'' என, நிதித்துறை செயலர் சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின் போது சட்டசபையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் படிப்படியாக, 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கலால் வரி, 500 கோடி ரூபாய் உட்பட, 2,100 கோடி ரூபாய், வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு, மூன்று ஆண்டுகளாக வரி விதிக்காததால், 3,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.

அதை ஈடுகட்டுவதற்காக, பெட்ரோலிய பொருட்களுக்கு வரி கூட்டப்பட்டது. அதனால், ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். அரசின் மொத்த வருவாய் செலவினங்களில், அரசு ஊழியர் சம்பளம், 26 சதவீதம்; ஓய்வூதியம், 12 சதவீதம் என, 38 சதவீதம் ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024