கோவாவில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
மார்ச் 17, 05:30 AM
பனாஜி,
கோவாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களையும், பா.ஜனதா 13 இடங்களையும் பெற்றன. மேலும் மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகள் தலா 3 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
இந்த சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க பா.ஜனதா நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பயனாக மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, தேசியவாத கட்சி மற்றும் 3 சுயேச்சைகளும் பா.ஜனதாவை ஆதரிக்க முன்வந்தன.
மனோகர் பாரிக்கர் பதவியேற்பு
இதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கரை கோவாவின் புதிய முதல்–மந்திரியாக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்தது. அதன்படி மந்திரி பதவியை ராஜினாமா செய்த அவர், மாநில கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் அவர் அளித்தார்.
இதை ஏற்று மனோகர் பாரிக்கரை முதல்–மந்திரியாக பதவியேற்குமாறு கவர்னர் மிருதுளா சின்கா அழைப்பு விடுத்தார். அதன்பேரில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கடந்த 14–ந் தேதி பதவியேற்றுக்கொண்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இதற்கிடையே மாநிலத்தில் 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தங்களை ஆட்சியமைக்க அழைக்காமல், பா.ஜனதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்புக்கு தடையில்லை என அறிவித்தது. எனினும் புதிய அரசு 16–ந் தேதி (நேற்று) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
22 உறுப்பினர் ஆதரவு
அதன்படி நேற்று சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்தது. பா.ஜனதாவின் சித்தார்த் கன்கோலியங்கர் தற்காலிக சபாநாயகராக பொறுப்பு வகித்தார். காலையில் சட்டசபை கூடியதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர் புதிய அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தினார்.
இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 22 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 16 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர்.
காங்கிரஸ் உறுப்பினர் விஸ்வஜித் ராணே இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதன் மூலம் மனோகர் பாரிக்கர் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சட்டசபை 22–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. ராஜினாமா
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஸ்வஜித் ராணே தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சித்தார்த் கன்கோலியங்கர் ஏற்றுக்கொண்டார். விஸ்வஜித் ராணே, வல்போய் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் ஆவார்.
காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்ற பின்னரும் மாநிலத்தில் அரசு அமைக்க தவறியது விஸ்வஜித் ராணேவுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. புதிய அரசு அமைக்க காங்கிரஸ் சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகளை தவறாக வழிநடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்திக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் தற்போது எம்.பி.யாக உள்ளார். 6 மாதத்துக்குள் அவர் எம்.எல்.ஏ. ஆக வேண்டும். தற்போது வல்போய் தொகுதி காலியாகி இருப்பதால் மனோகர் பாரிக்கர் அங்கு போட்டியிட கூடும் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment