பெயரால் வந்த சிக்கல்; தவிக்கும் இன்ஜினியர்
ராஞ்சி;ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த, 25 வயது இன்ஜினியர், இரண்டு ஆண்டுகளாக, 40க்கும் மேற்பட்ட, 'இன்டர்வியூ' போயும், எந்த வேலையும் கிடைக்காமல் தவிக்கிறார். அதற்கு முக்கிய காரணம், அவரது பெயர், சதாம் உசேன் என்பதுதான். தற்போது நிவாரணம் கேட்டு, கோர்ட்டுக்கு சென்றுள்ளார்.
ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த, சதாம் உசேன், 25, தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலையில், 2014ல், மெரைன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், இரண்டாவது இடத்தை பிடித்த அவர், இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்றார்; ஆனாலும், அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
ஈராக் சர்வாதிகாரியாக இருந்த, சதாம் உசேனின் பெயரை வைத்துள்ளதே, தனக்கு வேலை கிடைக்காததற்கு காரணம் என்பதை தெரிந்து கொண்டார்.அதைத் தொடர்ந்து, தன் பெயரை, சாஜித் உசைன் என்று மாற்றினார். பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை என, அனைத்து அடையாள அட்டைகளிலும், பெயரை மாற்றினார். கல்விச் சான்றிதழ்கள் அனைத்திலும் சதாம் உசேன் என்ற பெயரே உள்ளதால், அவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.இந்நிலையில், தன், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்களில் பெயரை மாற்றித் தரும்படி, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி, ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'சதாம் உசேன் பெயரை வைத்துள்ளதால், வெளிநாடுகளுக்கு அதிகம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ள இவருக்கு வேலை அளித்தால், சில சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் தான், வேலை தர நிறுவனங்கள் மறுத்திருக்கலாம்' என, மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments:
Post a Comment