Monday, March 20, 2017

விபத்து ஏற்படுத்தியவருக்கு தண்டனை ஆயுளுக்கும் வாகனம் ஓட்ட முடியாது

புதுடில்லி : டில்லியில் அதிவேகமாக லாரியை ஓட்டி, 9 வயது சிறுவன் உயிரிழக்க காரணமாக இருந்த வழக்கில், குற்ற வாளிக்கு வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்ட தடை விதித்து, கோர்ட், அதிரடி உத்தர விட்டது.
சிறுவன் உயிரிழப்பு:

கடந்த, 2000ம் ஆண்டில், டில்லியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றின் அருகே, அதிவேகமாக வந்த லாரி மோதி, 9 வயது சிறுவன் உயிரிழந்தான். அந்த விபத்தில், குழந்தையை அழைத்துக் கொண்டு வந்த தந்தையும் படுகாயமடைந்தார். இதையடுத்து லாரியை ஓட்டி வந்த, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சுனில் குமாருக்கு, மாஜிஸ்திரேட் கோர்ட், 18 மாத சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதி அர்ச்சனா சின்ஹா உத்தரவிட்டதாவது: லாரி டிரைவர் சுனில் குமார் வேகமாக வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்பட காரணமாக அமைந்துள்ளார். எனவே, அவரது வாழ்நாள் முழுவதும், எந்த ஒரு வாகனமும் ஓட்ட தடை விதிக்கப்படுகிறது.
ஓராண்டாக குறைப்பு:

அவரது ஓட்டுனர் உரிமம் முடக்கி வைக் கப்படுகிறது. அதேசமயம் அவரது குடும்ப வறுமையை கணக்கில் வைத்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை, ஓராண்டாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025