Thursday, March 23, 2017

சேலம் மாவட்டத்தில் 70 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 23, 04:30 AM

சேலம்,

ரே‌ஷன் கார்டுகள்

தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரே‌ஷன் கார்டுக்கு பதில், ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அனைத்து ரே‌ஷன் கார்டுகளிலும், குடும்பத்தில் உள்ள நபர்களின் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்த வரையில் மொத்தம் 10 லட்சத்து 2 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. இதில் 6 மாதத்திற்கு மேல் ரே‌ஷன் பொருட்கள் வாங்காத சுமார் 70 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த 70 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆதார் எண் இணைப்பு

எனவே, சம்பந்தப்பட்ட ரே‌ஷன்கார்டுதாரர்கள் உண்மையான காரணம் தெரிவித்து மனு செய்தால், பரிசீலனை செய்யப்படும் என்றும், இதுவரை 10 ஆயிரம் ரே‌ஷன்கார்டுதாரர்கள் மனு செய்துள்ளனர் என்றும், அந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 90 சதவீதம் ரே‌ஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. அந்த கார்டுகளுக்கு ரே‌ஷன் பொருள் வினியோகம் சம்பந்தமான விவரம், அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மிக விரைவில் 100 சதவீத இணைப்பு பணி நிறைவடையும். ஏப்ரல் 1–ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, தமிழகம் முழுவதும் ரே‌ஷன் கார்டுகள் தணிக்கை செய்யப்பட்டு, 5.14 லட்சம் போலி கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024