Thursday, March 23, 2017

எக்ஸ்பிரஸ்களாக மாறிய சாதாரண பஸ்கள்: கட்டணம் மறைமுகமாக உயர்வு

பழைய டப்பா பஸ்களை எக்ஸ்பிரஸ் பைபாஸ் ரைடர், 1 டூ 1, 1 டூ 5, என பல்வேறு பெயர்களில் மாற்றி பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
போக்குவரத்து கழகம், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில், ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், சம்பள உயர்வு, பணப்பலன் கோரி போர்க்கொடி துாக்கி உள்ளனர். அதனால் வருவாயை அதிகரிக்க, முதல் கட்டமாக, சென்னையில், சாதாரண பஸ்களை, எக்ஸ்பிரஸ்கள், சொகுசு பஸ்கள் என பெயர் மாற்றி, கட்டணத்தை உயர்த்தினர். இதற்கு, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், கட்டண உயர்வை மறுத்தார்.

ஆனாலும், சென்னையை தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும், கட்டண உயர்வு என அறிவிக்காமல் சாதாரண பஸ்கள் எண்ணிக்கையை குறைத்து, பழைய, 'டப்பா' பஸ்களை எக்ஸ்பிரஸ், பைபாஸ் ரைடர், 1 டூ 1, 1 டூ 5 என, பல்வேறு பெயர்களில் மாற்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி

அதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து கழகங்களை, நிதி நெருக்கடியில் இருந்து மீட்க, வருவாயை பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம், கட்டண உயர்வு சாத்தியமில்லை என்பதால் சாதாரண, கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள், எக்ஸ்பிரஸ் கட்டணத்துக்கு மாற்றப்பட்டுள்ளன' என்றனர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024