மருத்துவ அறிக்கை வெளியீடு ஏன்? : சுகாதாரத்துறை செயலர் விளக்கம்
தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:ஜெயலலிதா மறைவு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவரது மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளோம். டில்லி, எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை, அரசு அறிக்கை அனைத்தையும் பார்வையிடும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது தெளிவாகிறது. தனிப்பட்ட நபரின் சிகிச்சை விபரத்தை வெளியிடக் கூடாது என்ற விதி உள்ள போதிலும், வதந்திகளை தவிர்க்க, பத்திரிகை செய்தி அளித்துள்ளோம். எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கையை, முழுமையாக வெளியிட்டுள்ளோம். அரசு டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த, சிகிச்சை முறையும் வெளியிடப்பட்டு உள்ளது. மாநில அரசின் கோரிக்கை அடிப்படையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தனர். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் அளித்துள்ளோம்; நீதிமன்றத்திலும் அறிக்கை அளித்துள்ளோம். மறைந்த முதல்வருக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. தேவை அடிப்படையில், மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சிகிச்சையை பாராட்டி உள்ளனர்; யாரும் குறை கூறவில்லை. நேரடியாக ஜெ.,வை பார்த்து சிகிச்சை அளித்தனர். அறிக்கையை, திருத்தம் செய்யவில்லை. 2016 டிச., 4 மாலை, 4:30 மணிக்கு, ஜெ.,வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டிச., 5ல், 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று எய்ம்ஸ் மருத்துவர்களும் வந்தனர். மருத்துவ முறைப்படி, முடிவுகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment