Thursday, March 16, 2017

நீட் தேர்வு: தமிழக நிலைக்கு ஐகோர்ட் வேதனை

சென்னை: நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்கும்போது, தமிழகம் மட்டும் எதிர்ப்பது தமிழக மாணவர்களின் தகுதியை குறைத்த மதிப்பிடுவது ஏன் என சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

வழக்கு:

மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு இடங்களை முழுமையாக வழங்க தனியார் மற்றும் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அவமானம்:

அப்போது நீதிபதி கூறியதாவது: நீட் தேர்வு வேண்டாம் என அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதையே அரசும் ஏற்கிறது. நீட் தேர்வு வேண்டாம் எனக்கூறுவது தரமான கல்வியை வழங்கவில்லை என்பது தான் அர்த்தம். பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழகம் மட்டும் தான் நீட்தேர்வை எதிர்க்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என கூறுவது மாணவர்களின் கல்வி தரத்தை குறைப்பதாகும். தகுதியான மாணவர்களுக்கு தகுதியான கல்வி மறுக்கப்படுவது அவமானத்திற்குரியது. பிற மாநிலங்கள் ஒப்புக்கொள்ளும்போது, அதனை எதிர்த்து தமிழக மாணவர்களின் தகுதியை குறைத்து மதிப்பிடுவது ஏன்? மூன்று ஆண்டுக்கு ரூ.1 கோடி செலவு செய்யும் மாணவர்கள் அதனை திருப்பி எடுப்பதை விட்டு விட்டு எவ்வாறு சேவை செய்வார்கள். 2016ல் அரசு ஒதுக்கீட்டில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன. மருத்துவ கவுன்சில் விதிகளின்படி முறையாக மருத்துவ இட ஒதுக்கீடு செய்யப்பட்டதா? என்பது தொடர்பாக தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27 க்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024