Sunday, March 19, 2017

முதலில் சேலம், கோவைக்கு ஸ்மார்ட் கார்டு வினியோகம்

மேட்டூர்;தமிழகத்தில் முதலாவதாக, சேலம், கோவை மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இம்மாத இறுதியில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.தமிழகம் முழுவதும் கார்டுதாரர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது, 'ஆதார்' எண்களையும், ரேஷன் பணியாளர்களிடம் வழங்கி, பதிவு செய்து கொள்ள அரசு உத்தரவிட்டது.இதில், சேலம் மற்றும் கோவை மாவட்டத்தில், 80 சதவீத கார்டுதாரர்கள், தங்கள் ஆதார் எண்களை பதிவு செய்து விட்டனர். 

இதனால், தமிழகத்தில் முதற்கட்டமாக சேலம், கோவை மாவட்ட கார்டுதாரர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.மார்ச் இறுதியில், இரு மாவட்ட கார்டுதாரர்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கார்டை ரேஷனில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்த முடியும். அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025