இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை
இதுபோல் சட்ட விதிகள் உள்ளது எனக்கு தெரியாது. ‛எஸ்பிபி 50' என்ற இசை நிகழ்ச்சியை எனது மகன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தார். டோரன்டோ நகர், ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். அப்போது இளையராஜா தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. முன்னர் நான் கூறியது போல், இது பற்றிய சட்டம் எனக்கு தெரியாவிட்டாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். கீழ்படிய வேண்டும்.இதுபோன் சூழ்நிலையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை எங்களது குழுவால் இனிமேல் பாட முடியாது. ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். கடவுள் அருளால், மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளேன். அவற்றை பாடுவேன். வழக்கம்போல் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் ரசிகர்கள் எந்த விவாதமும் நடத்த வேண்டாம். மோசமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். இதனை கடவுள் திட்டமிட்டிருந்தால் அதற்கு நான் அடிபணிய வேண்டும். இவ்வாறு எஸ்பிபி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment