Saturday, March 18, 2017

நீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

மதுரை, : உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மருத்துவ மாணவர்களுக்கான 'நீட்' தேர்வை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நடந்து வந்த நிலையில், நாடு முழுவதும் 'நீட்' நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்துமாறு, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர், ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனால், தமிழகத்தில் கடந்த ஆண்டு இந்த தேர்வு முறை பின் பற்றப்படவில்லை. ஆனால் இந்தாண்டு முதல், 'நீட்' தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்.

இருப்பினும் தமிழக அரசு, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. ஆனால் இதற்கு ஒப்புதல் கிடைக்காது என்றே மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி
வருகின்றனர்.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு, அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் டில்லி சென்று மத்திய அர டம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 'நீட்' தேர்வு முறையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்க தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., ஐ.ஐ.டி., பொறியியல் படிப்பு போன்றவற்றுக்கான தகுதித் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., போன்ற கல்வி திட்டங்களுக்கு இணையாக, சமச்சீர் கல்வி திட்டத்தின் பாடத் திட்டங்கள் இல்லை என்பதே இதற்கான காரணம்.அக்கல்வி திட்டங்களை, பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் கொண்டு வந்திருந்தால், தற்போது இந்திய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

குழப்பும் மசோதா'நீட்' தேர்வு கிராமப்புற மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்பது உண்மையல்ல. மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்களான 5500ல், அரசு பள்ளியில் படித்து சேர்ந்த மாணவர்கள் 250 பேர் மட்டுமே. இவர்களும் தங்கள் திறமையினால் தேர்வானார்களே தவிர சமச்சீர் கல்வியினால் அல்ல.

தமிழக அரசின் எதிர்ப்பு மசோதா பெற்றோர், மாணவர்களை குழப்பும் வகையில் உள்ளது. எந்த கல்வி திட்டத்தில் மாணவர்கள் பயில வேண்டும் என்ற தெளிவு இல்லை.எனவே அரசு 'நீட்' தேர்வை முற்றிலும் புறக்
கணிக்க நடவடிக்கை எடுக்காமல், ஓரிரு ஆண்டுகள் மட்டும் விலக்கு கேட்க வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு தேர்வுக்கு 'நீட்'டை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தை, தமிழ் வழியில் முதற்கட்டமாக 10 சதவீத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் துவக்க வேண்டும், என்றார்.-------------

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...