வோடபோன்- ஐடியா மொபைல் நிறுவனங்கள் ஒன்றிணைந்தன
இங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் நிறுவனமும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா செல் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளதாக, இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளன.
இணைப்புக்குப் பிறகான புதிய நிறுவனத்தின் 45.1% பங்குகள் வோடஃபோன் வசம் இருக்கும். ஏற்கெனவே 4.9% பங்குகளை, வோடபோன் நிறுவனம் ரூ.38.74 பில்லியன் தொகைக்குத் தங்களுக்கு விற்றுவிட்டதாக ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐடியா நிறுவனத்துக்கு, புதிய நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
குமாரமங்கலம் பிர்லா, புதிய நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வோடபோன், ஐடியா இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் குறிப்பிட்ட காலத்துக்கு சம அளவிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு அறிவிப்பு வெளியானதற்குப் பிறகு ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 14.25% அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி இறுதியில் வோடபோன் - ஐடியா இணைப்புக்கான பேச்சுவார்த்தை துவங்கியது.
இணைப்புக்குப் பிறகான புதிய நிறுவனத்தின் பங்கு தொலைதொடர்பு நிறுவனங்களைப் பொருத்தவரை 43% ஆக இருக்கும். இதன்மூலம் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்த ஏர்டெல் நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment