Friday, March 17, 2017

ஜெ. நினைவிடத்தில் பட்ஜெட்டை வைத்த விவகாரம்: அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை - ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தல்

2017-18-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக பட்ஜெட் அடங்கிய சூட்கேசை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து வணங்கினார் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

தமிழக சட்டப்பேரவையில் பட் ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக் குமார் நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக பட்ஜெட் ஆவணம் வைக்கப்பட்ட பெட்டியை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து வணங் கினார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட் சித் தலைவர்களும் வழக்கறிஞர் களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின்:

ஜெயலலிதா சமாதியில் வைத்து அதன்பின் சட்டப்பேரவை யில் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்துள் ளார். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையில் அழிக்க முடியாத கரும்புள்ளியை அமைச் சர் ஏற்படுத்திவிட்டார். அவருக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரவை என்பது சட்டப்பேரவை தான். சமாதிகளை பேரவையாக கருத முடியாது. சட்டப்பேரவை விதிகள், அரசியல் சட்ட அங்கீ காரம் பெற்றவை. பேரவை விதி களையும், அரசியல் சட்டத்தையும் ஜெயக்குமார் மீறியுள்ளார். பேரவை யில் தாக்கல் செய்யப்படும் வரை, பட்ஜெட் பற்றிய ரகசியம் காக்கப் பட வேண்டும் என்பது மரபு. அந்த மரபுகளை மீறி, பட்ஜெட்டை சமாதி வரை எடுத்துச் சென்ற ஜெயக்குமார் மீது தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ எஸ்.செம்மலை:

நிதிநிலை அறிக்கை என்பது ரகசியம் காக்கப் பட வேண்டிய ஒன்று. அது முதன் முதலில் சட்டப்பேரவையில்தான் வைக்க வேண்டும். பொது இடத் தில் வைக்கக்கூடாது. தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் இதுபோன்ற நடைமுறை இருந்ததில்லை. முன் னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைந்த பின், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள் ளிட்ட நிதியமைச்சர்கள், எம்ஜிஆர் நினைவிடத்தில் பட்ஜெட்டை வைத்து வணங்கிய முன்மாதிரி இல்லை. தற்போது புதிய நடைமுறையை உருவாக்கிய காரணமும் தெரியவில்லை. ஒரு வேளை குற்ற உணர்வின் காரண மாக பாவமன்னிப்பு தேடி ஜெய லலிதா சமாதியில் வைத்து வணங்கி விட்டு வந்திருக்கலாம். இதுபோன்ற நடவடிக்கை சட்டப்பேரவை விதி களுக்கு உட்பட்டதா என்பதற்கு சட்டப் பேரவைத் தலைவரும், செயலாளரும்தான் பதில் சொல்ல வேண்டும்.

சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை தலைவர் கே.பாலு:

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு வெளியில் வந்தால், அதை வைத்து ஆட்சியையே கலைத்துவிட முடியும். ஜெயலலிதாவின் படம், பெயரை அரசின் நலத்திட்டங்களில் பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில், பட்ஜெட் பெட்டியில் ஜெயலலிதா படத்தை போட்டு, அவர் சமாதியில் வைத்து அவரின் திட்டங்கள் தொடரும் என நிதியமைச்சர் அறி வித்துள்ளார். இதன்மூலம், சட்டப் பேரவையின் மாண்பு கிழிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் ஒரு மோச மான அரசியல் முன்னுதாரணத்தை நிதியமைச்சர் ஜெயக்குமார் ஏற்படுத்தி விட்டார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன்:

பட்ஜெட்டை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து எடுத்து வந்ததன் மூலம் இந்த அரசையே நிதியமைச்சர் அவமானப்படுத்தி விட்டார். இது சட்டரீதியாக தவறு இல்லை என்றாலும், தார்மீக ரீதியில் குற்றம். ஒரு கட்சியின் கொள்கை முடிவு ஊழலாக இருக்க முடியாது. சட்டப் பேரவைக்குள் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பேரவைத் தலைவரின் தன்னிச்சையான அதிகாரத்துக்குட் பட்டது. ஆனால், நிதிநிலை அறிக் கையை சமாதியில் வைத்து எடுத் துச் சென்றதன் மூலம் இதை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கான முகாந்திரம் உள்ளது. ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரக் குவியல் மையம்தான் சட்டப் பேரவை. அதை அவமானப்படுத் தும் வகையில் சமாதியில் வைத்து நிதிநிலை அறிக்கையை எடுத்துச் சென்ற நிதியமைச்சர் மீது ஏன் தார்மீக அடிப்படையில் வழக்குத் தொடரக்கூடாது?
இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024