Tuesday, March 21, 2017

தபால் சேமிப்பு கணக்கு துவக்குவோர் அதிகரிப்பு

கோவை: வங்கிகள் சேவை கட்டணங்களை, வரும் ஏப்., முதல், உயர்த்தியுள்ள நிலையில், தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு துவங்குவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.தனியார் மற்றும் தேசிய வங்கிகள், சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை, உயர்த்தி உள்ளன. மேலும், பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன என்ற அச்சம் மக்களுக்கு எழுந்துள்ளது. மேலும், பல்வேறு சேவைகளுக்கான நிபந்தனை கட்டணங்களையும் அறிவித்துள்ளது. 

இதனால், பலரின் கவனம், தபால் துறை பக்கம் திரும்பியுள்ளது.குறைந்தபட்சம், 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினாலே, ஏ.டி.எம்., கார்டு, எஸ்.எம்.எஸ்., வசதி, மற்றும் அனைத்து வங்கி, ஏ.டி.எம்.,களிலும் வரைமுறையில்லா இலவச பணபரிவர்த்தனை, கூடுதல் வட்டி உட்பட பல வசதிகளால், தபால் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க, பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

வங்கி ஊழியர்கள் பலரும், இதில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
பாஸ்போர்ட் பெறுவது எளிது! ஓரிரு மாதங்களில், தபால் நிலையங்களிலே, பாஸ்போர்ட் மையங்கள் துவங்கப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க, தபால் துறையின், 'பாஸ்புக்' ஆதாரமே போதுமானது என்பதால், கல்லுாரி மாணவர்களும், தபால் சேமிப்பு கணக்கு துவங்க முனைப்பு காட்டி வருகின்றனர்.

கோவை கோட்ட தபால் முதுநிலைக் கண்காணிப்பாளர் சித்ராதேவி கூறியதாவது: மக்களிடையே, தபால்துறை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. கோவை மண்டலத்தில், 2016ம் ஆண்டு, 800 கணக்குகள் புதிதாக துவங்கப்பட்ட நிலையில், தற்போது, இரு மாதங்களில் மட்டும், 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன் மூலம், மேற்கு மண்டல அளவில், கடந்த, டிச.,ல், 11வது இடத்தில் இருந்த கோவை தபால் கோட்டம், தற்போது, இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...