Tuesday, March 21, 2017

என்னை கடிச்ச நாய்களை பிடிங்க! : போலீசில் இப்படியும் ஒரு புகார்

திருப்பூர்: 'என்னை கடித்த நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும்' எனக் கூறி, திருப்பூரில் ஒருவர், போலீசில் புகார் கொடுக்க சென்றதால், போலீசாருக்கு, ஆத்திரத்தோடு, சிரிப்பும் வந்தது.திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன், நேற்று காலை, வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 

அப்போது, ராமகிருஷ்ணன், 40, என்பவர் தள்ளாடியபடி வந்து, வரவேற்பாளரிடம் ஒரு புகாரை சொன்னார்.'ஊத்துக்குளி ரோட்டில் நடந்து சென்ற போது, என்னை, மூன்று நாய்கள் கடித்து விட்டன; அதை உடனடியாக பிடிக்க வேண்டும்' என்பது தான், அந்த புகார். பணியில் மூழ்கியிருந்த போலீசார், ஒவ்வொருவரின் முகத்தை பார்க்க, ஆத்திரம் கொப்பளித்தாலும், மறு பக்கம் சிரிப்பையும் அடக்க முடியவில்லை.

 இதை கண்டுகொள்ளாத ராமகிருஷ்ணன், நாய்களின் பெயர் ஜூலி, செம்பட்டை, கருப்பன் என கூறியதால், 'ஆரம்பமே இப்படி இருக்கே...' என, போலீசார் நொந்து கொண்டு, 'ஏம்பா... இது, போலீஸ் ஸ்டேஷன்... முதல்ல மருத்துவமனைக்கு போய் ஊசியை போட்டு கொள்' என, அறிவுறுத்தினர். ஆனால், போலீசாரின் பேச்சை காதில் வாங்காத அவர், 'எங்க ஏரியாவுல நிறைய நாய்கள் சுத்தி சுத்தி வருது. எங்க ஏரியாகாரங்க தான், இங்க போய் புகார் கொடுக்க சொன்னாங்க' என, திரும்பத் திரும்ப பேசியபடி, அடம் பிடித்தார். ஒரு வழியாக, அந்த நபருக்கு புரிய வைத்து, அனுப்புவதற்குள், போலீசார் படாதபாடு பட்டனர்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...