Thursday, November 2, 2017

வாட்ஸ் அப்பில் 'டெலிட்' வசதி அறிமுகம்: ஆனால் 7 நிமிடம்தான் அவகாசம்
Published : 01 Nov 2017 12:00 IST
க.சே.ரமணி பிரபா தேவி



வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு அனுப்பிய தகவலை அழிக்கும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால், அனுப்பிய தகவலை 7 நிமிடங்களுக்குள் அழிக்கவேண்டும்.

இதன்மூலம் குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் தவறுதலாகவோ, தெரியாமலோ அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை திரும்பப் பெறமுடியும். ஆனால் பெறுபவர்களுக்கு ’இந்த செய்தி அழிக்கப்பட்டது’ என்ற செய்தி வாட்ஸ் அப் தரப்பில் இருந்து அனுப்பப்படும். எப்படி அழிப்பது?

முதலில் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். செய்திகளையோ, புகைப்படங்களையோ மற்ற ஆவணங்களையோ அழிக்கும் வசதியை மேம்படுத்தப்பட்ட (Updated) வாட்ஸ் அப் சேவையில் மட்டுமே பெற முடியும்.

இதன் பின்னர் செய்தியை அழிக்கும் 'டெலிட்' பொத்தானைத் தொட்டால், மூன்று தெரிவுகள் திரையில் மிளிரும். நமக்கு மட்டும் அழிக்கவேண்டுமா (Delete for me), வெளியே வந்துவிடலாமா (Cancel), எல்லோருக்கும் அழிக்க வேண்டுமா (Delete for Everyone) என்பன அவை.

இதில் 'Delete for Everyone' தேர்வு மூலம் செய்திகளை அழிக்கமுடியும். ஆனால் செய்தியை அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் அழிக்கவேண்டும். உடனே நமக்கு 'இந்த மெசேஜை நீக்கிவிட்டீர்கள்' (You deleted this message) என்று வாட்ஸ் அப் நமக்கு செய்தி அனுப்பும்.



இதன்மூலம் குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் தவறுதலாகவோ, தெரியாமலோ அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை திரும்பப் பெறமுடியும். ஆனால் பெறுபவர்களுக்கு 'இந்த செய்தி அழிக்கப்பட்டது' (This message was deleted)என்ற செய்தி வாட்ஸ் அப் தரப்பில் இருந்து அனுப்பப்படும்.

ஏராளமான குறுஞ்செய்தி செயலிகள் இணைய சந்தையில் வரத் தொடங்கியுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப் தனது பயனர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவுனம், வாட்ஸ் அப்பைக் கையகப்படுத்திய பிறகு, இத்தகைய சிறப்பம்சங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

news today 23.10.1024