Friday, November 3, 2017

அரசுப் பள்ளியில் குளம் போல் தேங்கிய மழைநீர்

By DIN  |   Published on : 03rd November 2017 03:45 AM 
school

திருவேற்காடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது .
சென்னை புறநகர் பகுதியான திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட பல இடங்கள் சமீபத்தில் பெய்த தொடர் கன மழையால் வெள்ளக்காடானது. 
இந்நிலையில், கோலடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மழைநீர் அகற்றப்படாமல் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. 
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நகராட்சி உடனடியாக, நடவடிக்கை எடுத்து, பள்ளி வளாகத்தில் உள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...