சோதனையில் சிக்கியது என்ன?: மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியது வருமான வருமான வரித்துறை
Published : 11 Nov 2017 19:31 IST
சென்னை
மூன்று நாள் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் சிக்கியது உட்பட பல்வேறு தகவல்களை மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்துக்கு இரண்டு அறிக்கைகளாக வருமான வரித்துறை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலா, தினகரன், திவாகரன் அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், ஜெயா, நமது எம்ஜிஆர், ஜாஸ் சினிமாஸ் அலுவலகங்களில் மூன்றாவது நாளாக சோதனை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் 3-ஆவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு முக்கிய சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்ட ஜாஸ் சினிமாஸை வாங்கியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாஸ் சினிமாஸ் டீல் குறித்து சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது வருமானவரித்துறை. ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சசிகலா குடும்பத்தினர் வாங்கியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
சத்யம் சினிமாஸிடம் இருந்து 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 தியேட்டர்களை சசிகலா குடும்பம் வாங்கியதும் தெரியவந்துள்ளது.
இதற்காக 2013 ஆண்டில் கட்டப்பட்ட திரையரங்கங்களுக்கு அனுமதியளிக்கப்படாமல் ஒரு வருடம் அலைக்கழிக்க வைக்கப்பட்டதாக அப்போது புகார் எழுந்தது.
இதே போல் மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாகவும், 60 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து மதிப்பீடு செய்தல் மற்றும் முறைகேடுகள் குறித்த கணக்கில் வராத 15 கிலோ தங்கம், ரூ.5.5 கோடி கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
போலி நிறுவனங்களில் வருவாய் வந்ததாக காட்டப்பட்டு ரூ.150 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 50 நாட்களுக்குள் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பெரும்பாலான ஆவணங்கள், தகவல்கள் அனைத்தும் விவேக் ஜெயராமன், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா மற்றும் ஆடிட்டர்களிடம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்றாம் நாளான இன்று திடீரென திவாகரனின் மகள் ராஜமாதங்கி ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் நகரில் வசிக்கிறார் இவரது வீட்டிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் வரும் திங்கள்கிழமை சென்னை வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment