Saturday, June 2, 2018

நடிகருக்கு முன்ஜாமின் உச்ச நீதிமன்றம் மறுப்பு

Added : ஜூன் 02, 2018 03:10

புதுடில்லி:பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, சமூக வலைதளத்தில், இழிவான கருத்துக்களை பகிர்ந்த, நடிகர், எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

நடிகரும், பா.ஜ., பிரமுகருமான, எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, இழிவான கருத்துக்களை, தன், 'பேஸ்புக்' பக்கத்தில், சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், அவர் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.போலீஸ், தன்னை கைது செய்யலாம் என்ற நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுவை, எஸ்.வி.சேகர் தாக்கல் செய்தார். அவருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர்.

இதையடுத்து அவர், உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், நேற்று வரை, அவரை கைது செய்ய தடை விதித்திருந்தனர்.இந்நிலையில் நேற்று, அவரது மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க, நீதிபதிகள் மறுத்து விட்டனர். தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'எழும்பூர் நீதிமன்றத்தில், 30ம் தேதியே, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டது.

இதையடுத்து, 'எழும்பூர் நீதிமன்றத்தில், எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Can’t recover excess salary from retd Class III, IV staff: HC Bhopal/Jabalpur:

Can’t recover excess salary from retd Class III, IV staff: HC Bhopal/Jabalpur: 02.09.2026 Recovery of excess salary payments from retired Cl...