நவ., 1 முதல் பஸ் 'ஸ்டிரைக்' Added : அக் 05, 2018 00:29
சென்னை:அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், நவம்பர், 1 முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தவும், இதற்கான, நோட்டீசை, வரும், 8ம் தேதி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை, பண பலன்களை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. நேற்று, சென்னை பல்லவன் இல்லம் முன், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து, தொழிற்சங்கத்தினர் நேற்று மாலையில், ஆலோசனை நடத்தினர். இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 1 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்துவது என்றும், இதற்காக, வரும், 8ம் தேதி, முறைப்படி அரசிடம், நோட்டீஸ் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment