காவலன்' செயலிக்கு சபாஷ்! பெண்கள் பயன்படுத்த வேண்டுகோள்
Updated : டிச 08, 2019 02:14 | Added : டிச 08, 2019 00:43
சென்னை : தமிழக காவல் துறை அறிமுகம் செய்துள்ள, 'காவலன்' செயலியால், சென்னையில் முதல் பலன் கிடைத்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், அத்துமீறி நடக்க முயன்ற சம்பவத்தில், 'காவலன்' செயலியில் பெறப்பட்ட புகாரில், ஐந்து நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரை கைது செய்துள்ளனர். 'இந்த செயலியை, அனைத்து பெண்களும் பயன்படுத்த வேண்டும்' என, டி.ஜி.பி., திரிபாதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், ஷம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த, 26 வயது பெண் மருத்துவரை, லாரி தொழிலாளர்கள் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். பின், பெண் மருத்துவரை கொலை செய்து, தீ வைத்து எரித்து தப்பினர். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட, லாரி தொழிலாளர்கள் முகமது ஆரீப், 26, ஜொலு நவீன், 20, ஜொலு சிவா, 20, சென்னகேசவலு, 20 ஆகியோரை, சைபராபாத் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
விழிப்புணர்வு
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, காவல் துறை, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள, 'காவலன்' மொபைல்போன் செயலி குறித்து, பெண்கள், முதியோர், சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, டி.ஜி.பி., திரிபாதி, அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
பாதுகாப்பு
அதன்படி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், நேற்று முன்தினம், பெண்களிடம், 'காவலன்' செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழகம் முழுவதும், மாவட்ட எஸ்.பி.,க்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் பயனாக, 'காவலன்' செயலியை, ஒரு வாரத்தில், 1.10 லட்சம் பேர், புதிதாக பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 'காவலன்' செயலியை, நான்கு லட்சம் பேர் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, ஒரு வாரத்தில் மேலும், 1.10 லட்சம் பேர், பதிவிறக்கம் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment