மொபைல் போன் வாங்கினால் வெங்காயம் 1 கிலோ இலவசம்
Added : டிச 08, 2019 00:17
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், 'மொபைல்போன் வாங்கினால், 1 கிலோ வெங்காயம் இலவசம்' என, விற்பனை கடையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
வெங்காயம் விலை, 200 ரூபாயை தொட்டதால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.வெங்காயத்தை, தங்க நகை போல் அணிந்து கொள்வது, வெங்காய வயலுக்கு இரவில் காவல் இருப்பது போன்ற, 'மீம்ஸ்'கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சரவணகுமார், 35. இவர், எட்டு ஆண்டுகளாக, பட்டுக்கோட்டை தலையாரி தெருவில், மொபைல் போன் விற்பனை கடை நடத்தி வருகிறார்.இந்த கடையில், 'மொபைல் போன் வாங்கினால், 1 கிலோ வெங்காயம் இலவசம்' என, விளம்பரம் செய்துள்ளனர்.
இது குறித்து, சரவணகுமார் கூறுகையில், ''இந்த விளம்பரத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு நாளுக்கு, மூன்று மொபைல்போன் விற்பனையான நிலையில், வெங்காயம் இலவசம் அறிவிப்புக்கு பின், எட்டு போன்கள் விற்பனையாகின்றன,'' என்றார்.

No comments:
Post a Comment