Friday, March 13, 2015

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: கோடைக் காலத்தை சமாளிப்பது எப்படி?

கோப்பு படம்
சென்னையில் கோடைக் காலம் தொடங்கும் முன்பே சில பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு ஆரம் பித்து விட்டது. மடிப்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை பகுதிகளில் சில இடங்களில் குழாய்களில் குடிநீர் வராததால் லாரிகள் மூலம் கொண்டு வரப் படும் நீரை மக்கள் நம்பியி ருக்க வேண்டிய நிலை உருவாகி யுள்ளது.

சென்னைக்கு நீர் வழங்கும் ஆதாரங்களான பூண்டி, சோழ வரம், செங்குன்றம் ஆகிய ஏரிகளில் நீரின் அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்திருப்பது கவலைக்குரிய விஷயமாகும். 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் மார்ச் 12-ம் தேதி நிலவரப்படி 165 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஆனால் இதே நாளில் கடந்த ஆண்டு 396 மில்லியன் கன அடி நீர் இருந்தது. அதே போன்று சோழவரம் ஏரியில் தற்போது 70 கன அடி நீர் உள்ளது, ஆனால் கடந்த ஆண்டு 76 கன அடி நீர் இருந்தது. செங்குன்றம் ஏரியில் கடந்த ஆண்டு 2,287 கன அடி நீர் இருந்த நிலையில்,இந்த ஆண்டு 1,782 கன அடி நீர்தான் உள்ளது.

ராயப்பேட்டை பார்டர் தோட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குழாய்களில் குடிநீர் வரவில்லை என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். அங்கு வசிக்கும் முகமது அப்ரோஸ் பாஷா கூறும் போது, “ கிட்டத்தட்ட ஒரு மாதமாக எங்கள் குடியிருப்புக்கு குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து விசாரித்தபோது அழுத்தம் இல்லாததால் தண்ணீர் இந்தப் பகுதிக்கு வருவதில்லை என்று கூறுகிறார்கள். இப்போதே இந்த நிலை என்றால் மே, ஜூன் மாதங்களில் எப்படி போதிய அழுத்தம் இருக்கும்?” என்றார்.

மடிப்பாக்கத்தில் வசிக்கும் சுப்ர மணியன் கூறும்போது, “எங்கள் பகுதிக்கு அருகில் குடிநீர் தொட்டி உள்ளது. எனினும் எங்க ளுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விடப் படுகிறது. இப்போது சில வீடுகளில் குழாய்களில் தண்ணீர் வராததால் பொது குழாயில் எடுத்து கொள்கின்றனர்” என்றார்.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் வசிக்கும் லட்சுமி கூறும்போது, “கடந்த சில நாட்களாக குடிநீர் வராததால் புகார் அளித்திருக் கிறோம். குழாய்களில் ஏதோ கோளாறு என்று கூறப்படுகிறது” என்றார்.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, “கோடை காலத்தில் மக்களின் நீர் தேவை அதிகரிக்கும். அவர்கள் பொதுவாக பயன் படுத்தும் நீரை விட அதிக நீர் பயன்படுத்துவார்கள். எனவே, குழாய்களின் ஆரம்ப பகுதி களில் இருப்பவர்களுக்கு அதிக மாகவும், கடைசி பகுதிகளில் இருப் பவர்களுக்கு குறைவாகவும் நீர் கிடைக்கலாம். இதனை சீர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இருப்பதால் தினமும் 200 மில்லியன் கன அடி நீர் கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகிறது” என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024