புதுடெல்லி: இந்திய ரயில்வேத்துறை, ஏஜெண்டுகளின் முறைகேடுகளை தடுக்க இ-டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.
இ-டிக்கெட் முன்பதிவில் ஏஜெண்டுகள் செய்யும் முறைகேடுகளை தடுப்பதற்காக, புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தி உள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை, ஒரு யூசர் லாக்-இன் ஐ பயன்படுத்தி, ஒரு தடவை மட்டுமே இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அடுத்த இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றால், தானாகவே லாக்-அவுட் ஆகிவிடும்.
இது, ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜெண்டுகள் உள்பட அனைவருக்கும் பொருந்தும். ஆனாலும், ஒரே நேரத்தில் புறப்பாடுக்கும், திரும்பி வருவதற்கும் முன்பதிவு செய்வதற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது. பாதுகாப்பு துறையினரின் முன்பதிவுக்கும் இது பொருந்தாது.
கூட்ட நெரிசல் நேரத்தில், ஏஜெண்டுகள் ஒரே லாக்-இன் ஐ பயன்படுத்தி, இ-டிக்கெட்டுகளை மொத்தமாக முடக்கி விடுகிறார்கள். அதை தடுப்பதற்காக, புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment