வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள், தங்களது பதிவுகளைhttp://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் சரிபார்த்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அந்த செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள்http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர் கள், மேற்கூறிய இணைய முக வரியை பயன்படுத்தி, தங்களது பதிவு அடையாள அட்டையை பதி விறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பதிவு விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் மற்றும் விடுபாடுகள் இருப்பின், உடனடியாக கல்வி, சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அடையாள அட்டை, ஆதார் எண், கைப்பேசி எண்/ இணையதள மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன், இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்துக்குள், வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். திருத்திய பதிவு அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment