புதுச்சேரி அருகே வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு ஒன்று காலி கூல்டிரிங் டின்னுக்குள் தலையை விட்டு மாட்டிக் கொண்டது.
புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் டி.புதுக்குப்பம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பர் தனது வீட்டில் குடும்பத்துடன நேற்றிரவு தூங்கி கொண்டு இருந்தார். காலை 6 மணியளவில் வீட்டில் புஸ்... புஸ்... என சத்தம் வந்ததையடுத்து ரமேஷ் எழுந்து சென்று பார்த்துள்ளார்.
அப்போது, வீட்டில் ஒரு சந்து பகுதியில் 5 அடி நீள நல்ல பாம்பு ஒன்று காலி கூல் டிரிங் டின்னுக்குள் தலையை விட்டபடி ஊர்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பாம்பை விரட்டவும் முடியாமல், அடித்து கொல்லவும் முடியாமல் பயந்து நடுங்கிய ரமேஷ், இதுபற்றி தனது நண்பர் ஜோதிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.நண்பரின் வீட்டுக்கு வந்த ஜோதி, குளிர்பான டின்னில் இருந்து பாம்பின் தலையை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், முடியவில்லை. இதனால், பாம்பு மேலும் வலி தாங்க முடியாமல் துடித்துள்ளது.
ரமேஷ் குடும்பத்தினர் குளிர்பானத்தை குடித்து விட்டு காலி டின்னை வைத்திருந்தபோது, நல்ல பாம்பு குளிர்பானம் குடிக்கும் ஆசையில் அந்த டின்னுக்குள் தலையை விட்ட போது சிக்கிக் கொண்டு விட்டது. தொடர்ந்து குளிர்பான டின்னுடன் நல்லபாம்பை பிடித்து ஒரு சாக்கு பையில் போட்டு திருக்கனூர் கடை வீதிக்கு கொண்டு வந்தார் ரமேஷ்.
கடை வீதியில் வைத்து சாக்கு பையை திறந்ததும், நல்ல பாம்பு சாக்கு பையில் இருந்து வெளியேறி குளிர்பான டின்னுடன் அங்கும், இங்குமாக ஓடியது. இதனை பார்த்ததும் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர் ஜோதி, அந்த நல்ல பாம்பை பிடித்து மீண்டும் சாக்கு பையில் அடைத்தார்.
உடனே இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர் கண்ணதாசன், பாம்பின் தலையில் சிக்கியிருந்த கூலடிரிங் டின்னை லாவகாமாக அகற்றினார். அதன் பின்னர் அந்த பாம்பை அதே சாக்கு பையில் அடைத்து எடுத்துச் சென்றார்.
No comments:
Post a Comment