Thursday, March 26, 2015

அடக்கொடுமையே...இந்தியா வெற்றி பெற நாக்கை அறுத்துக்கொண்ட வாலிபர்!





வேலூர்: இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என வேண்டி வாலிபர் ஒருவர் நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்ட நிலையில், ஆட்டத்தின் போக்கு தொடக்கத்திலேயே இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பை மங்கச் செய்தது.

இந்நிலையில் வாணியம்பாடியை சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகரான சுதாகர் என்ற வாலிபர், இந்தியா வெற்றி பெற வேண்டும் என வேண்டி, போட்டி தொடங்குவதற்கு முன்பே, கோவிலுக்கு சென்று தனது நாக்கை அறுத்துக்கொண்டார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் சுதாகரால் இனிமேல் பேச முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பேச முடியாத நிலையில் இருக்கும் சுதாகருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவருடைய தம்பி ராஜீவ்காந்தி நம்மிடம் கூறுகையில், " அண்ணனுக்கு கல்யாணம் ஆகி இப்பதான் ஒன்றரை வயசுல ஒரு குழந்தை இருக்கு. அவரு பெருசா ஒண்ணும் படிக்கலை 5வது வரைக்கும்தான் படிச்சிருக்காரு. ஆனா கிரிக்கெட்டுனா ரொம்ப உசுரு. இன்னைக்கு காலைல ஊர்ல இருக்குற வேடியப்பன் கோயிலுக்கு கற்பூரம் ஏத்திட்டு சாமி கும்பிட்டு வர போய்ட்டிருந்தார்.

அங்க போனவரு சாமிக்கு கற்பூரம் ஏத்திட்டு கத்தியால நாக்கை அறுத்து சாமிக்கு வேண்டுதல் செஞ்சி இருக்காரு.வலி தாங்க முடியாம ஒரு வீட்டுக்கு போன் பண்ணி பேச பாத்திருக்கார். அவரால பேச முடியல. உடனே பக்கத்துல இருந்த ஒரு பெண்மணிகிட்ட போனை குடுத்து சைகையால சொல்லி பேசச் சொல்லி இருக்கார். தகவல் தெரிஞ்சு ஓடி வந்து பார்த்தப்ப நாக்கு தனியே கோயில்ல கிடந்துச்சு. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம்.

இனிமே ஜென்மத்துக்கும் பேச்சு வர வாய்ப்பு இல்லைனு சொல்லி வாயில தையல் போட்டிருக்காங்க.ஏன் இப்படி பண்ணேனு கேட்டேன். பேச முடியாம கிரிக்கெட் பௌலிங் போடுவது போலவும், பேட்டிங் செய்வது போலவும் சைகை காட்டி சாமி கும்பிட்டு காட்டுனார். இந்தியா ஜெயிக்கணும்னு இப்படி பண்ணுனியான்னு கேட்டேன். ஆமான்னு தலையை ஆட்டி அழுதார்.

இந்த அளவுக்கு கிரிக்கெட் ரசிகரா இருப்பாருன்னு நினைக்கல’’’ என்றார் பதட்டத்துடன்.

நாக்கை அறுத்துக் கொண்ட இந்த சுதாகருக்கு, இன்று இந்தியா தோற்றது தெரியாதாம். நம்மிடமும் சைகை காட்டிக் கொண்டிந்தார்.அவரிடம் உண்மையை சொல்லாமல் கிளம்பிவிட்டோம்.

எப்படியெல்லாம் பண்றாங்கப்பா!

-சு. ராஜா (மாணவப் பத்திரிகையாளர்)

படம்: ச.வெங்கடேசன்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...