Thursday, March 12, 2015

உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர்

logo
பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அதுபோல், இந்த ஆண்டு 93 நாடுகளில், 140 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் என தெரிய வந்துள்ளது. பாரீஸ், ஓஸ்லோ, ஜூரிச், சிட்னி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த முறை நடத்தப்பட்ட ஆய்விலும், இதே நகரங்கள் இதே இடங்களைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது, மிகவும் அபூர்வமானதாக கருதப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள பலசரக்கு சாமான்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளதை விட 11 சதவீதம் அதிகமாகும். துணிமணிகள், 50 சதவீதம் அதிகமாகும். மேலும், சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கு சான்றிதழ் பெறும் முறை உள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து செலவு, நியூயார்க்கை விட மூன்று மடங்கு அதிகமாக போய்விட்டது. இந்த காரணங்களால், சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024