Friday, March 13, 2015

"அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் இல்லை'

"மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை தற்போதுள்ள 60 வயதில் இருந்து அதிகரிக்கவோ, குறைக்கவோ அரசுக்கு திட்டம் இல்லை' என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மேற்கண்டவாறு பதிலளித்தார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதைக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக இரு முறை வெளியான தகவல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும் வாக்காளர்களிடம் அவர் கூறியிருந்தார்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இறுதிக் காலத்தில், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை அரசு அதிகரிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024