14 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் நீதிபதி கர்ணன்!
14 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற அரசியல் சாசனக் குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக நீதிபதி கர்ணனை நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இரண்டு முறை கர்ணன் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் கர்ணன், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 பேர் மற்றும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்து, சி.பி.ஐ அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில், 'பொதுமக்கள் முன்னிலையில் உச்சநீதிமன்றம் தன்னை அவமானப்படுத்திவிட்டது. ஆகவே, இழப்பீடாக 14 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசனக் குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment