சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்தும் மறுக்கப்படுகிறது' ஜேஎன்யு.,வில் பயின்ற தமிழக் மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடைசியாக தனது முகநூலில் பதிவு செய்த நிலைத்தகவல் இதுதான்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடப்பிரிவில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன், திங்கள்கிழமை மாலை அவரது நண்பரின் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். தற்கொலை குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் கடைசியாக மார்ச் 10-ம் தேதியன்று முத்துக்கிருஷ்ணன் அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தி ருந்த நிலைத்தகவல் அவர் மன உளைச்சலில் இருந்ததை உறுதி செய்வது போல் இருக்கிறது.
அவரது முகநூல் பதிவு:
"எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது" இவ்வாறு கடந்த 10-ம் தேதியன்று அவர் தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment