Tuesday, March 14, 2017

மின் கணக்கீட்டில் முறைகேடு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை: தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை


மின் பயன்பாட்டை சரியாக கணக்கிடாமல் முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரியம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் கள் மானிய விலையிலும் வழங்கப் படுகிறது. இதற்காக மின்வாரியத் துக்கு ஏற்படும் இழப்பை தமிழக அரசு வழங்குகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள தால் மின்சாரப் பயன்பாடு அதிகரித் துள்ளது. இதனால் மின்கட்டணம் அதிகரித்து, அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
இந்நிலையில், வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டை கணக் கீடு செய்யும் ஊழியர்கள் சிலர் முறையாக கணக்கிடாமல், முறை கேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன. அதாவது, வீடுகளில் 500 யூனிட்டுக்கு மேல் மின்நுகர்வு இருந்தால் இரு மடங்கு கட்ட நேரிடும். இதனால், அவர்களுக்கு சாதகமாக செயல்படும் மின்ஊழியர் கள், 500 யூனிட்டைவிட குறைத்து கணக்கீடு செய்கின்றனர். பரவ லாக இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதால், மின்வாரியத்துக்கு அதிக அளவில் இழப்பீடு ஏற்படுகிறது.

இதை தடுக்கும் வகையில், மின்பயன்பாட்டை முறையாக கணக்கீடு செய்யுமாறு ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதில் முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024