மேச்சேரி அருகே கட்டிய மறுநாளே பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், முத்தாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் சத்துணவுக் கூடமும், அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. சுற்றுச் சுவர் இல்லாத இப்பள்ளிக்கு, மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.1 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை பணிக்கு பூமிபூஜை போடப்பட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பெய்த லேசான மழையில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.
செவ்வாய்க்கிழமை இதனைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கட்டப்பட்ட சுற்றுச் சுவர் முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு, தரமான பொருள்களைக் கொண்டு மீண்டும் சுற்றுச் சுவர் கட்டவேண்டும் என பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த கல்வித் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
Dailyhunt
No comments:
Post a Comment