வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீனுக்கு எஸ்.ஆர்.எம் பச்சமுத்து ரூ.10 கோடி உத்தரவாதம்
சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் வசூலித்த வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜாமீன் வழங்க ஹைகோர்டில் எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து ரூ.10 கோடி உத்தரவாதம் அளித்தார்.
எஸ்ஆர்எம் கல்லூரியில் 225 மருத்துவ சீட்டில் மதனுக்கு மட்டும் ஆண்டுதோறும் 50 சீட் வழங்கப்படுமாம். இதன் மூலம் மதனுக்கு ரூ.25 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
இது தவிர இவர் வாங்கி கொடுக்கும் 50 சீட்டுகளுக்கான கமிஷன் தொகையும் மதனுக்கு கிடைத்ததால் ராஜ வாழ்க்கை வாழ்ந்த மதன் வேந்தர் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார்.
கடந்த ஆண்டும் எம்பிபிஎஸ் சீட்டுக்கு பணம் வாங்கினார். அதில் பாதி பணத்தை கல்லூரி நிர்வாகத்தில் உள்ள ஒருவரிடம் தனது கூட்டாளியான சுதீர் மூலம் கொடுத்து அனுப்பினார். அந்த பணத்தை சுதீர் கொடுக்கும் போது அதை வீடியோ எடுத்துக் கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கும் ரவி பச்சமுத்து, திடீரென இந்த ஆண்டு சீட் வழங்க தடை விதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதன் இந்த விவகாரத்தில் பச்சமுத்து மாட்டினால்தான் தாம் தப்பிக்க முடியும் என நினைத்து கடிதம் எழுதி வைத்து தலைமறைவானார்.
பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் சுமார் 179 நாள்கள் தலைமறைவாக இருந்த மதன், திருப்பூரில் உறவினர் வர்ஷா வீட்டில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் மதன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் மதன், எஸ்ஆர்எம் குழுமத்தின் ஏஜென்ட் என்பதால் ஜாமீனுக்கான உத்தரவாத தொகையான ரூ.10 கோடியை கட்ட பச்சமுத்துக்கு கோர்ட் ஆணையளித்தது. கோர்ட் உத்தரவை அடுத்து மதன் ஜாமீனுக்காக ரூ.10 கோடிக்கு உத்தரவாதம் அளிப்பதாக பச்சமுத்து கூறியுள்ளார்.
Source: tamil.oneindia.com
No comments:
Post a Comment