Tuesday, March 14, 2017


முத்துக்கிருஷ்ணன் மன அழுத்தத்தில் இருந்தார்' : டெல்லி காவல்துறை விளக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணனின் சடலம், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் இருந்து நேற்று மீட்கப்பட்டது. அவர், தற்கொலைசெய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு மர்மங்கள் எழுந்து வருகின்றன என்று முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.



இந்நிலையில், இதுகுறித்து டெல்லி காவல்துறைத் துணை ஆணையர் ஈஷ்வர் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'முத்துக்கிருஷ்ணன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவரது செல்போன் அழைப்புகள் ஆய்வுசெய்யப்பட்டுவருகின்றன. அவர் தூக்கில் தொங்கியதை மணிப்பூர் மாணவர்தான் முதலில் பார்த்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. அவரது அறையில் தற்கொலைக்கான கடிதம் எதுவும் இல்லை.

அவர், மாணவர் அமைப்பில் தீவிரமாகச் செயல்படவில்லை. அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும், அவரது பெற்றோரிடம் இனிதான் விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024