Friday, March 10, 2017

இருளின் பிடியில் அம்பத்தூர் பேருந்து நிலையம்

By DIN  |   Published on : 07th March 2017 04:02 AM

ambatur
இருண்டு கிடக்கும் அம்பத்தூர் பேருந்து நிலையம்.

அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் மின் விளக்குகள் எரியாததால் தினமும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் பேருந்து நிலையத்துக்கு வருவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சென்னை புறநகரில் மிகப்பெரிய பேருந்து நிலையம் அம்பத்தூர் பேருந்து நிலையம். ’வானமே கூரையாய்' என்ற தலைப்பில் இப்பேருந்து நிலையம் குறித்து தினமணியில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அப்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வேதாசலம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிமென்ட் ஓடு போட்ட பேருந்து நிலையத்தை உருவாக்கினார்.
அதேசமயம் பேருந்து நிலையத்துக்கான மின் இணைப்பைப் பெறாமல், அருகிலுள்ள அம்மா உணவகத்திலிருந்து மின் இணைப்பு எடுத்து, பேருந்து நிலையத்துக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது.
இதனால் அம்மா உணவகத்தின் நிதிச் சுமை அதிகரித்ததாகத் தெரிகிறது. மேலும், மாநகரப் பேருந்து நிலையத்துக்கு தனியாக மின்இணைப்பை பெற்றுக் கொள்ளுமாறும், தங்களது மின் இணைப்பை துண்டித்துக் கொள்வதாகவும் அம்மா உணவக நிர்வாகம் கூறியது. ஆனால் மாநகரப் பேருந்து நிர்வாகம் இதற்கு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து கடந்த வாரம் அம்பத்தூர் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அம்பத்தூர் பேருந்து நிலையம் இருளில் மூழ்கியது. ஆனால் பேருந்து நிலைய நிர்வாகம் இந்த விஷயத்தில் அலட்சியமாக உள்ளதாகவே தெரிகிறது.
இதன் காரணமாக இரவு ஏழு மணிக்குமேல் பெண்கள் பேருந்து நிலையத்துக்குள் செல்லவே அச்சம் கொள்கின்றனர்.
மாநகரப் பேருந்து நிர்வாகம் உடனடியாக பேருந்து நிலையத்துக்கு மின் இணைப்பைப் பெற்று ஒளிமயமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024