Monday, March 13, 2017

திருமலையில் பெருகி வரும் தங்க பல்லிகள்

Published on : 02nd March 2017 05:38 PM 
tirupathi
திருமலையில் உள்ள சக்கர தீர்த்தப் பகுதியில் குகைகளில் வாழ்ந்து வரும் தங்க பல்லிகள்.

திருப்பதி சேஷாசல வனப் பகுதியில், தங்க பல்லிகளின் எண்ணிக்கை பெருகி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சேஷாசல வனப் பகுதியில் அரிய வகை தங்க பல்லிகள் வாழ்ந்து வருகின்றன.
திருமலையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சக்கரதீர்த்தம் மற்றும் 25 கி.மீ. தொலைவில் உள்ள யுத்தகல தீர்த்தம் பகுதியில் இந்த பல்லிகள் அதிகம் காணப்படுகின்றன.
கடந்தாண்டு சக்கர தீர்த்தத்தில் ஒரே ஒரு தங்க பல்லி மட்டுமே இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால் தற்போது 5 பல்லிகளாக இனப்பெருக்கம் அடைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல் யுத்தகல தீர்த்தப் பகுதியிலும் இந்த தங்க பல்லிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. அழிந்து வரும் உயிரினங்களின் வரிசையில் இருந்த தங்க பல்லி எண்ணிக்கை பெருகி உள்ளதால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேஷாசல மலையில் நிலவி வரும் சாதகமான காலநிலையே இவை இனப்பெருக்கம் அடைய காரணம் என அவர்கள் கூறினர்.
தங்க பல்லி பற்றிய குறிப்பு: இதன் அறிவியல் பெயர் காலோடாக்டீஸ் லோடஸ் ஆரீஸ். தங்கத்தை ஒத்த அடர் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறம். 150 மி.மீ. முதல் 180 மி.மீ. நீளம் வளரும். சூரியஒளி படாத குளிர்ந்த காலநிலையில் வாழும்.
கற்குகைகள் மற்றும் கற்களின் இடையில் நிறத்தன்மை உள்ள இடத்தை தன் இருப்பிடமாக அமைத்துக் கொள்ளும். ஒரே முறையில் 40 முதல் 50 முட்டைகள் இடும். இரவில் மட்டுமே இருப்பிடத்தை விட்டு வெளியில் வரும்.
வீடுகளில் உள்ள பல்லிகளைக் காட்டிலும் அதிகமாக சப்தம் இடும். இந்த சப்தம் வினோதமாக இருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024