மின் வைப்பு தொகை பதிவு அலட்சியத்தால் மக்கள் அதிர்ச்சி
பதிவு செய்த நாள் 14 மே03:18
மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் ஊழியர்கள், மின் கட்டணம், கூடுதல் வைப்பு தொகை விபரத்தை, தனித்தனியாக குறிப்பிடாமல், மொத்தமாக எழுதுவதால், அதிக கட்டணத்தை பார்த்து, மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும் போது, மின் நுகர்வோரிடம் இருந்து, காப்பு வைப்பு என்ற பெயரில், குறிப்பிட்ட தொகை வசூலிக்கிறது. இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அந்த வைப்பு தொகை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, மின் இணைப்பு பெறும் போது, குறிப்பிட்டிருந்த அளவை விட, மின் பயன்பாடு அதிகரித்தால், கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. மின் பயன்பாடு குறைந்திருந்தால், வைப்பு தொகை கிடையாது.
தற்போது, அதிக மின் பயன்பாடு உள்ள நுகர்வோரிடம் இருந்து, கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மின் ஊழியர்கள், மின் கட்டணத்தையும், வைப்பு தொகையையும் மொத்தமாக சேர்த்து கணக்கிட்டு, அட்டையில் எழுதுவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, வீட்டு நுகர்வோரிடம் இருந்து, கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. அதற்கு வட்டியும் தரப்படுகிறது. மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் போது, மின் கட்டணம், வைப்பு தொகையை தனித்தனியாக குறிப்பிட்டு எழுதும்படி, ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது; ஆனால், அதை பலர் கடைபிடிக்கவில்லை.
இருப்பினும், மின் கட்டண ரசீதில், கூடுதல் வைப்பு தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்; ஏற்கனவே உள்ள வைப்பு தொகை இருப்பு எவ்வளவு; அதற்கு வழங்கப்பட்டுள்ள வட்டி ஆகிய விபரங்கள் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதை பார்த்து, மக்கள் தெரிந்து கொள்ளலாம். தற்போது, கூடுதல் வைப்பு தொகையை, தவணை முறையிலும் செலுத்தலாம். அதற்கான விபரங்கள் தேவைப்படுவோர், தங்களின் உதவி பொறியாளர்களை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment