Friday, May 26, 2017

ஆன்லைன் மூலம் மீன் விற்பனை

பதிவு செய்த நாள்26மே2017 00:14




சென்னை: தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், 'ஆன்லைன்' மூலம், மீன் மற்றும் மீன் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை, சென்னை பட்டினப்பாக்கத்தில், அமைச்சர் ஜெயகுமார் நேற்று துவக்கி வைத்தார்.

மீன் விற்பனைக்காக, www.meengal.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், அன்றைய தினம் எந்த வகையான மீன்கள் விற்பனைக்கு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். பின்கோடு எண்ணை டைப் செய்தால், அந்த ஏரியா ஸ்டாலில், எவ்வளவு மீன்கள் இருப்பு உள்ளன என்பதை அறியலாம். அன்றைய மார்க்கெட் நிலவரப்படி, ஒரு கிலோ மீன் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். எந்த வகையான மீன், எவ்வளவு தேவை என, 'ஆர்டர்' கொடுத்தால், வீட்டிற்கு மீன் சப்ளை செய்யப்படும். 

மீனுக்கு உரிய விலையை, ரொக்கமாக கொடுக்கலாம்; ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். ஆன்லைனில் மீன் வாங்குவோர், குறைந்தபட்சம், 500 ரூபாய்க்கு மீன் வாங்க வேண்டும். முதற்கட்டமாக, அண்ணா நகர், நந்தனம், தேனாம்பேட்டை, சாந்தோம், சிட்லபாக்கம் ஆகிய இடங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றை, சுற்றியுள்ள பகுதிகளுக்கு, மீன் சப்ளை செய்யப்படும். துாரத்திற்கேற்ப சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டத்தை சென்னை முழுவதும் விரிவுபடுத்த, மீன் விற்பனை ஸ்டால்கள் அதிகம் திறக்கப்பட உள்ளன. முழு மீன், சுத்தம் செய்யப்பட்டு துண்டுகளாக்கப்பட்ட மீன் என, இரு வகையாக விற்பனைக்கு இருக்கும். தேவையானதை மக்கள் வாங்கிக் கொள்ளலாம்.மேலும், 044 - 24956896 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், மீன்கள் வாங்க ஆர்டர் கொடுக்கலாம். சென்னையில், மீன்கள் விற்பனைக்கு, மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து, பிற மாநகராட்சிகளுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...