'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திருத்தம் செய்ய வசதி
பதிவு செய்த நாள்26மே2017 00:40
சென்னை: ''ஸ்மார்ட் ரேஷன் கார்டில், தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யலாம்,'' என, உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
சென்னையில், உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு, பொது வினியோக திட்ட கம்ப்யூட்டர்மயம் குறித்து, நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.
அதை துவக்கி வைத்த பின், அமைச்சர் காமராஜ் பேசியதாவது: தமிழகத்தில், இதுவரை, 86 லட்சம் பேருக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த கார்டை பெற்ற பின், அதில் மாற்றங்கள் தேவைப்பட்டால், பொது வினியோக திட்ட இணையதளம், 'மொபைல் ஆப்' மூலம் மற்றும் உணவு வழங்கல் அலுவலகத்தில் சரி செய்து கொள்ளலாம். மாற்றம் செய்த பின், புதிய கார்டை, அரசு இ - சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment