தனியார் பஸ்களில் அலறுது ஸ்பீக்கர்கள்தாங்கமுடியல...: அலைபேசியில் கூட பேசமுடியாத சப்தம்
பதிவு செய்த நாள் 14 மே2017 02:06
ஸ்ரீவில்லிபுத்துார்,:விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் அலறும் ஸ்பீக்கர்களால் பஸ்களில் பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. அவசரத்துக்கு அலைபேசியில் கூட பேசக்கூட முடியாத அளவிற்கு சப்தம் இருப்பதால், பாதிக்கிறார்கள். இதை தவிர்க்க மாவட்ட அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகாசி, கோவில்பட்டி, அருப்புக்கோட்டையிலிருந்துமதுரை, ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து தென்காசி மற்றும் திருநெல்வேலி, சிவகாசியிலிருந்து துாத்துக்குடி உட்பட பல்வேறு வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களை சேர்ந்த நுாற்றுக்கு மேற்பட்ட பஸ்கள் மாவட்டத்தில் இயங்கி வருகிறது.
மக்கள் மத்தியில் நற்பெயர்
அரசு பஸ்களை விட சொகுசு, கட்டணம் குறைவு, அதிவிரைவு போன்ற காரணங்களால் ஏற்கனவே மக்கள் கூட்டம் தானாகவே தனியார் பஸ்களுக்கு காத்திருந்து பயணித்து வருகின்றனர். சில நேரங்களில் இருக்க இடம் இல்லாமல் நின்று கொண்டே மதுரைக்கு பயணிப்பவர்களும் உண்டு. சரியான நேரத்தில் சென்றடைவதால் இந்த பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயர், நம்பிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
அவசரத்திற்கு பேசமுடியல
இந்நிலையில் தனியார் பஸ்கள் ஒவ்வொன்றும் புத்தம் புதியதாக, புதிய வண்ணங்களிலும் மிளிர்கிறது. இப்பஸ்களில் பொதுமக்களை ஈர்ப்பதற்காக, மோட்டார் வாகன சட்ட விதிகளுக்குமாறாக அலறும் ஸ்பீக்கர்கள், நவீன தொலைகாட்சி பெட்டிகள் இருந்த நிலையில், தற்போது வை-பை வசதிகளும் இருக்கும் அளவிற்கு கூடுதல் வசதிகள் செய்ய ப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான தனியார் பஸ்களில் இருக்கும் ஸ்பீக்கர்களில் மிகவும் அதிகளவு சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது.
இதனால், பஸ்களில் பயணிக்கும் முதியவர்கள், சிறு குழந்தைகள், நோயாளிகள் பாதிக்கபடுகின்றனர். அத்தகைய பஸ்களில் பயணிக்கும் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள் அவசரத்திற்கு அலைபேசியில் உயர்அதிகாரிகளிடம் பேசக்கூட முடியவில்லை. அதிலும் ஒரு சில தனியார் பஸ்களில் இருக்கும் ஸ்பீக்கர்களின் அதிர்வினால், வயது முதிர்ந்த இருதய நோயாளிகள் மிகவும் பாதிக்கின்றனர்.
போக்குவரத்து அதிகாரிகள்
அரசு பஸ்களில் இருந்த ஸ்பீக்கர்களால் உருவாகிய பல்வேறு பிரச்னைகளினால், அதை உடனடியாக அகற்ற, விருதுநகர் அரசுபோக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவின்படி, பெரும்பாலான பஸ்களில் ஸ்பீக்கர்கள் அகற்றப்பட்டுள்ளது. சில பஸ்களில் மட்டும் இன்னும் அகற்றப்படவில்லை. அரசு பஸ்களில் ஸ்பீக்கர்கள் அகற்றப்பட்டுள்ளதால், அப்பஸ்களில் பயணிக்கும் பயணிகள் சற்று மதியடைந்துள்ளனர்.இதேபோல் தனியார் பஸ்களில் அலறும் ஸ்பீக்கர்களை அகற்றியோ அல்லது ஒலியின் அளவை குறைத்து வைத்தோ, கேட்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிலையை ஏற்படுத்த மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.காது ஜவ்வு கிழியுது
ஸ்ரீவில்லிபுத்துார் சசிக்குமார், ''போக்குவரத்து விதிகளுக்கு மாறாக, ஓட்டுனர்களின் கவனத்தை திசைதிருப்பும் விதத்தில் தனியார் பஸ்களில் ஸ்பீக்கர்கள் அலறுகிறது. அதிலும் ஓட்டுனர்களே ஒலிபெருக்கிகளை கையாள்வது விபத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறது. அதிக ஒலியினால் பஸ்களுக்குள் இருக்க முடியவில்லை. அதிலும் ஒருசில பஸ்களில் காது ஜவ்வு கிழியும் அளவிற்கு சப்தம் பயணிகளை பயமுறுத்துகிறது. மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பயணிகளின் நலன்காக்கவேண்டும்,''என்றார்.

No comments:
Post a Comment