நாட்டிலேயே முதன்முறையாக, வெளிமாநிலப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு : கேரள அரசு முடிவு!
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பலர் தங்களது சொந்த ஊரை விட்டுவிட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில்தான் பணிபுரிந்துவருகின்றனர். பொதுவாக, மாநில அரசுகளின் காப்பீடு என்பது, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என இருந்துவருகிறது. இந்த நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக, கேரளாவில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை, அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
கேரளாவில், சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் பணிபுரிந்துவருகின்றனர். அதன்படி, அங்கு குறிப்பிடப்பட்ட சில மருத்துவமனைகளில் ரூ.15,000 வரை மருத்துவ சிகிச்சை பெறும் காப்பீட்டுத் திட்டத்தை, மாநில அரசு கொண்டுவர உள்ளது. அதேபோல, விபத்துகளில் உயிரிழக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, தலா ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
கேரள அரசு இதற்காக, 10 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. விரைவில் இந்தத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கேரளாவில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment