சவூதி அரேபியாவில் செவிலியராகப் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
Monday, July 3, 2017
''சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.54,000/- மாத ஊதியமும், அதிகபட்ச ஊதியம் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப வேலையளிப்போரால் நிர்ணயிக்கப்படுவதுடன் இலவச இருப்பிடம், விமானடிக்கெட்,உணவு, மருத்துவ காப்பீடு முதலியவை வழங்கப்படும். நேர்முகத்தேர்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் சென்னை மற்றும் பெங்களூருவில் வேலையளிப்போரால் நடைபெற உள்ளது.விருப்பமும் தகுதியும் உள்ள ஹீமோடயாலிசிஸ் செவிலியர்கள் ஜூலை 9-ம் தேதிக்குள் ovemcleq074@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு omcmanpower.com என்ற வலைதளத்திலும், 044-22505886, 22502267, 22500417, 8220634389 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் அறிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment