Sunday, November 12, 2017


புற்று நோயுடன் போராடும் 5 வயது சிறுமி சாஸ்திகா , தன்னை காப்பாற்றுமாறு வேண்டுகிறாள்

5 வயது சிறுமி சாஸ்திகா, சரண்யா- ரத்தினகுமார் அவர்களின் ஒரே மகள். நல்ல ஆரோக்கியமும் அறிவும் பெற்ற மகளை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம், கேன்சர்(புற்றுநோய்) எனும் உயிரைப்பறிக்கும் கொடிய நோயால் சாஸ்திகா பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.


இந்த புற்று நோய் உடல் முழுவதும் பரவும் தன்மை உடையது
ஆகஸ்ட் மாதம் சாஸ்திகாவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. மருந்து மாத்திரைகள் ஏதும் சரி செய்ய முடியவில்லை. காய்ச்சல் இருபது நாட்கள் தொடர்ந்து இருந்ததால் இரத்த பரிசோதனை, ஸ்கேன் செய்து பார்த்தனர். அதில் நியூரோபிளாஸ்டோமா என்ற கேன்சர் இருப்பதாக தெரியவந்தது. இது பொதுவாக சிறுநீரகத்தில் ஏற்படும், பிறகு வயிறு, கழுத்து, எலும்பு என்று உடல் முழுவதும் பரவும் தன்மை உடையது. உடனடியாக கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை, ரேடியோதெரபி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.

உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்பதால் இப்போது 10 நாட்களுக்கு ஒரு முறை கீமோதெரபி மேற்கொள்கிறாள்.


நோயின் கொடூரம் அதிகரித்து கொன்டே இருக்கிறது, அவள் வலியால் அழுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை
ரத்தினகுமார், சரண்யா இருவரும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். தங்களின் ஒரே மகள் இந்த சிறிய வயதில், தினம் தினம் வலியால் துடிப்பதை அவர்களால் சகித்து கொள்ள முடியவில்லை. எப்போதும் துறுதுறுவென்று வீட்டில் சுற்றிக்கொண்டிருந்தவள் இன்று படுக்கையில் இருக்கிறாள். சாஸ்திகா நான்கு வயதிலே மூன்று மொழிகளில் ரைம்ஸ் பாடுவாள் என்று சரண்யா பெருமையாக பகிர்ந்து கொள்கிறார். பள்ளி படிப்பை தொடர ஆர்வமாக இருந்தவள் இன்று உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள்.

"அவளுக்கு மேக் அப் செய்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அவள் கண் இமைகள் அடர்த்தியாக இருக்கும். ஆனால் இப்போது முடியெல்லாம் கொட்டி சோர்வாக இருக்கிறாள். அவளுக்காக நானும் மொட்டை அடித்து கொள்ள இருக்கிறேன். இதுவரைக்கும் அவள் எதற்காகவும் அடம்பிடித்தது இல்லை. இப்போ அவளை காப்பற்ற சொல்லி வலியில் தினமும் அழுகிறாள். ஆனால் ஏதும் செய்ய முடியாமல் நான் நிற்கிறேன்" - என்று சரண்யா கூறுகிறார்


மகளின் சிகிச்சைக்காக எல்லாவற்றையும் விற்றதோடு கடனும் வாங்கியுள்ளார், இருப்பினும் அது போதவில்லை
ரத்தினகுமார் ஒரு bpo வில் வேலை செய்கிறார். அவரின் வருமானத்தை வைத்து தான் மருத்துவ செலவுகளை பார்த்துக்கொள்கிறார். தன்னிடம் இருந்த எல்லா நகைகளையும் விற்றதோடு வேலை செய்யும் இடத்தில் இருந்து கடன் வாங்கியுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டவர்கள் குணமடையும் வாய்ப்பு 0% தான் என்று பல மருத்துவர்கள் கூறியுள்ளனர். சாஸ்திகாவிற்கு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர் 40 % வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் எப்படியாவது தன் குழந்தையை காப்பற்ற போராடி கொண்டிருக்கிறார்.

"எங்கள் வசதிக்கேற்ப தேவைகளை அமைத்து கொண்டு நாங்கள் வாழ்ந்து வந்தோம். நான் பத்து ருபாய் கூட யாரிடமும் கடன் வாங்கியது இல்லை. என் மகளின் புகைப்படத்தை எங்கும் பகிர்ந்துகொண்டதில்லை. இன்றைக்கு அவளின் புகைப்படத்தை காட்டி, அவளின் துயரத்தை சொல்லி பணம் வாங்குகிறேன் இந்த அவல நிலை எந்த பெற்றோருக்கும் வர கூடாது. நான் அவளை காப்பற்றுவேன் என்று அவள் நம்புகிறாள், அது பொய்யாவதை பார்ப்பதற்கான சக்தி என்னிடம் இல்லை" என்று ரத்தினகுமார் சொல்கிறார்.

நீங்கள் உதவு முடியும்!ரத்தினகுமார் இதுவரை 2 லட்சம் செலவு செய்துள்ளார், இன்சூரன்ஸ் பணமும் தீர்ந்து விட்ட நிலையில் சாஸ்திகாவின் சிகிச்சைக்கு இன்னும் 20 லட்சம் தேவைப்படுகிறது, இது அவர்களின் சக்திக்கு மீறிய தொகை. சிறுமியின் நம்பிக்கையையும் உயிரையும் காப்பாற்றுவதற்கு , உங்களின் நன்கொடை பெரும் உதவியாக இருக்கும்.

ஆதரவான ஆவணங்கள்
இந்த பிரச்சாரத்தின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பிரச்சார அமைப்பாளர் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.


சிறுமி சாஸ்திகாவிற்கு உதவ இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024