சுகாதார அமைச்சரை முற்றுகையிட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டம்
Added : நவ 23, 2017 23:23
சென்னை: மருத்துவ பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கக்கோரி, முதுநிலை பயிற்சி டாக்டர்கள், அமைச்சர் விஜயபாஸ்கரை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.
ஸ்டான்லி மருத்துவமனை : அதில், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், துறை செயலர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, முதுநிலை பயிற்சி டாக்டர்கள், 100க்கும் மேற்பட்டோர், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். அவர்கள், அமைச்சர் மற்றும் செயலரை முற்றுகையிட்டனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்து, அவர்களை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. அதையடுத்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
அரசு ஏற்கவில்லை : இது குறித்து, மருத்துவ மாணவர்கள் கூறியதாவது: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 556 டாக்டர்களுக்கு பணி ஆணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில், நான்காவது நாளாக, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை; கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment