வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
By சென்னை, |
Published on : 19th November 2017 01:45 AM
"லூட் லோ' என்ற பெயரில் பி.எஸ்.என்.எல். போஸ்ட் பெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 60 சதவீத கட்டணச்சலுகை மற்றும் 500 சதவீத டேட்டா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போஸ்ட் பெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவைகளின் கீழ், 60 சதவீதம் வரை சலுகை கொடுக்கப்படுகிறது. இதில், ரூ.225, ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1125 ஆகிய 7 போஸ்ட் பெய்டு திட்டங்களில் இணைப்பு பெற்றவர்களுக்கு 60 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர நிரந்தர மாதாந்திரக் கட்டணம் இருக்கும் திட்டங்களுக்கு 500 சதவீதம் கூடுதல் டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.99, ரூ.149, ரூ.225, ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1,125 ஆகிய மாதாந்திரக் கட்டணங்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. 500 எம்பி, 3 ஜிபி, 7ஜிபி, 15 ஜிபி, 60 ஜிபி மற்றும் 90 ஜிபிஆகியவற்றுக்கு இலவச டேட்டா வசதியை பயன்படுத்த முடியும். இந்த சலுகைகள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக கூடுதல் தகவல்களை www.bsnl.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என பிஎஸ்என்எல் சென்னை நிலைய தலைமை பொதுமேலாளர் எஸ்.எம்.கலாவதி தெரிவித்தார்
No comments:
Post a Comment